உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நுாலகம் - கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

நுாலகம் - கல்லுாரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரி, கலைஞர் நுாற்றாண்டு நினைவு நுாலகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் - மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஒப்பந்தத்தில் தலைமை நுாலகர் தினேஷ்குமார், கல்லுாரி பாத்திமா மைக்கேல் கையெழுத்திட்டனர். இதன் மூலம் கல்லுாரி நிகழ்ச்சிகளுக்காக நுாலக அரங்குகளை சலுகையாக வழங்குதல், மாணவிகளின் தனித்திறமையை வெளிப்படுத்தும் தளம் ஏற்படுத்தித் தருதல், போட்டித் தேர்வுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள இடமளித்தல் உள்ளிட்டவை ஒப்பந்தத்தில் இடம் பெற்றுள்ளன. நிகழ்ச்சியில் துணைத் தலைமை நுாலகர் சந்தானகிருஷ்ணன், துணை முதல்வர் பிந்து ஆண்டனி, ஒருங்கிணைப்பாளர் சாய்ரா பானு, பேராசிரியைகள் ரேவதி, விண்ணரசி, நுாலகர் சுஜாதா பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை