உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழைநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு "அலார்ட்

மழைநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு "அலார்ட்

மதுரை : 'மதுரை மாநகராட்சியில் மழைநீர் தேங்காதவாறு, வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ள,' அதிகாரிகளுக்கு 'அலார்ட்' செய்யப்பட்டுள்ளது. மழைகாலத்தில் மாநகராட்சியின் பெரும்பாலான பகுதியில், நீரில் மிதப்பது வழக்கமாக உள்ளது. இதை தடுக்கும் விதமாக, 2007 மே 2ல், 256 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவில் மழைநீர்வடிகால் திட்டம் கொண்டு வரப்பட்டது. நிதி இல்லாமல் திட்டம் முடங்கியுள்ளதால், மழைகாலத்தில் மதுரை மக்களுக்கு கூடுதல் சிக்கல் ஏற்படும். மராமத்து பணிக்காக, 11 கால்வாய்களில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை, மழைநீர் வெளியேற சிக்கல் ஏற்படுத்தும் என்பதால், அதை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மண்டல அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழைநீரை வெளியேற்றும் விதமாக, மண் அள்ளும் இயந்திரங்களை வாடகைக்கு பயன்படுத்தி, பணிகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. பாதிப்பு பகுதிகள் பற்றி அறிந்திருந்தால், முன்கூட்டியே தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகர் பொறியாளர் மதுரம் கூறியதாவது: மழைநீர் தேங்காமல் வெளியேற்ற, அனைத்து மண்டல பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை செல்ல வசதியாக கால்வாய்களை தயார்படுத்துமாறு கூறியுஉள்ளோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை