| ADDED : செப் 04, 2011 01:20 AM
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், ஆவணிமூலத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுந்தரேஸ்வரர் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நாளை (செப்.,5) இரவு நடக்கிறது. இத்திருவிழா ஆக.,24 கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை சுவாமியின் லீலைகள் நடக்கின்றன. ஐந்தாம் நாளான நேற்று, உலவாக் கோட்டை அருளிய லீலை நடந்தது. இன்று காலை பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை நடக்கிறது. நாளை காலை வளையல் விற்ற லீலை நடக்கிறது. இதைதொடர்ந்து, கோயில் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் இரவு 7.55 முதல் 8.19 மணிக்குள் சுவாமிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. பின், சுவாமியிடம் தக்கார் கருமுத்து கண்ணன் செங்கோல் பெற்று, சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் வலம் வந்து மீண்டும் சேர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. செப்., 6ல் நரியை பரியாக்கியது, செப்.,7ல் புட்டுக்கு மண் சுமந்தது, செப்.,8ல் விறகு விற்றது ஆகிய லீலைகள் நடக்கின்றன.