மேலும் செய்திகள்
கும்பாபிஷேக பணிகளை முறையாக நடத்துங்க...
1 hour(s) ago
குன்றத்து குமரனுக்கு இன்று பட்டாபிஷேகம்
1 hour(s) ago
அஜாக்கிரதையால் அரசு பஸ்கள் மோதல்: சிவகங்கர் கருத்து
1 hour(s) ago
மதுரையில் 4 பேருக்கு டெங்கு
01-Dec-2025
மதுரை : மின் கட்டண உயர்வு, மின் வெட்டு காரணமாக மதுரையில் பின்னல் கயிறு உற்பத்தி நிறுத்தப்பட்டது. வேலைக்கு ஏற்ப கூலி கிடைக்காததால், தொழிலாளர்கள் குடும்பத்துடன் பட்டினி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.மதுரை திருநகர், கைத்தறிநகர், கிருஷ்ணாபுரம் காலனி, அவனியாபுரத்தில் பின்னல் கயிறு தயாரிக்கும் குடிசை தொழிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தாலி கயிறு, அரைஞான் கயிறு, சுவாமி டாலர் கயிறு, கையில் கட்டும் பல வண்ண கயிறுகளை தயாரித்து வெளிமாநிலங்களுக்கு சப்ளை செய்கின்றனர்.கூலி உயர்வு இல்லை: நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் வேலை பார்த்தாலும், தொழிலாளர்களுக்கு 8 மணி நேர கூலி மட்டும் கிடைக்கிறது. போதாக்குறைக்கு மின் கட்டண உயர்வு, அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின் வெட்டு காரணமாக தொழிலை தொடர்ந்து நடத்த முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். கூலி உயர்வை 50 சதவீதம் அதிகப்படுத்தி தரும்படி வியாபாரிகளிடம் தொழிலாளர்கள் முறையிட்டனர். ஆனால் இதுகுறித்த பேச்சுவார்த்தையில் இழுபறி நிலை நீடிக்கிறது.தொழில் நிறுத்தம்: நூல் விலை உயர்வு மற்றும் கச்சாப்பொருட்கள் மற்றும் மின் கட்டண உயர்வு காரணமாக தொழிலை நிறுத்துவதாக, மதுரை பின்னல் கயிறு கூலி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்தது. சங்கத் தலைவர் ராகவன் கூறுகையில், ''மின் கட்டணம், மின் வெட்டு காரணமாக தொழில் நலிவடைந்து விட்டது. ஐம்பது சதவீதம் கூலி உயர்வு கேட்கிறோம். 18 சதவீதம் தருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். பேச்சு வார்த்தை நடக்கிறது,'' என்றார்.சிறு தொழில்கள், குடிசை தொழில்களை காக்கும் வகையில் மின் கட்டணம் உயர்வு மற்றும் மின் வெட்டு தளர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
01-Dec-2025