உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் அறையில் உள்ளிருப்பு போராட்டம் சம்பளம், ஓய்வூதியம் கிடைக்காததால் அதிருப்தி

மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் அறையில் உள்ளிருப்பு போராட்டம் சம்பளம், ஓய்வூதியம் கிடைக்காததால் அதிருப்தி

மதுரை:மதுரை காமராஜ் பல்கலையில் சம்பளம், ஓய்வூதியம் வழங்காதது, பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு இழுத்தடிப்பதை கண்டித்து பதிவாளர் அறைக்குள் பேராசிரியர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்பல்கலையில் நிதிப்பற்றாக்குறையால் அடிக்கடி சம்பளம் வழங்க முடியாத சூழல் ஏற்படுகிறது. தற்போது மே சம்பளம், ஓய்வூதியம் இதுவரை வழங்கவில்லை. மேலும் பேராசிரியர்கள் பலருக்கு பதவி நிலை உயர்வு (சி.ஏ.எஸ்.,) வழங்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் அதிருப்தியடைந்த பல்கலை பேராசிரியர்கள் நலச் சங்கம், ஓய்வூதியர்கள் சங்கத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நலச் சங்க பொதுச் செயலாளர் முனியாண்டி, தலைவர் ஆரோக்கியதாஸ், பொருளாளர் சண்முகையா, ஓய்வூதியர் சங்க தலைவர் சாமிநாதன், பொதுச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பதிவாளர் (பொறுப்பு) ராமகிருஷ்ணன் அறைக்கு சென்று 2 மணிநேரத்திற்கும் மேல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பதிவாளர் பேச்சுவார்த்தை நடத்தினார்.பொதுச் செயலாளர் முனியாண்டி கூறுகையில், பல்கலையில் தொடர்ந்து நிலவும் இச்சூழலுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும். சி.ஏ.எஸ்., பிரச்னையை விரைவில் தீர்ப்பதாகவும், சம்பளம், ஓய்வூதியப் பிரச்னையை ஜூன் 18 க்குள் தீர்ப்பதாகவும் பதிவாளர் உறுதியளித்துள்ளார். இதை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. சி.ஏ.எஸ்., தாமதம் ஆனால் அடுத்த கட்டமாக பதிவாளரை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை