உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் இதுவரை 1.51 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ்

மதுரையில் இதுவரை 1.51 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ்

மதுரை : மதுரை மாவட்டத்தில் 1.51 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படுகிறது. அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பள்ளிகளுக்கு படிவங்கள் அனுப்பப்படுகின்றன. தலைமை ஆசிரியர்கள் அவற்றை வகுப்பாசிரியர்களிடம் அனுப்பி, பூர்த்தி செய்து, டெப்போக்களில் வழங்குவர். அதனடிப்படையில் இலவச பஸ்பாஸ்கள் வழங்கப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1.78 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 1.87 லட்சம் முதல் 1.90 லட்சம் வரை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 1.51 லட்சம் பேருக்கு பஸ்பாஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல பள்ளிகளுக்கு படிவம் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை எதிர்பார்த்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் காத்திருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பள்ளியில் சேரும் மாணவர், வெளியேறும் மாணவர் பட்டியல், மாணவர்களின் பாஸ், பெயில் விபரம் போன்றவற்றை பள்ளிகள் வழங்க வேண்டும். இவ்விபரத்தை பல பள்ளிகள் இன்னும் வழங்காததால் அப்பள்ளிகளுக்கு இதுவரை பஸ்பாஸ் வழங்கப்படவில்லை. கடந்த ஆண்டு வரை அப்போதைய முதல்வர் கருணாநிதி படத்துடன் வழங்கப்பட்ட இலவச பஸ்பாஸ்கள், இந்த கல்வி ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் வழங்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை