உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாயப்பட்டறைகளுக்குஅதிகாரிகள் சீல் வைப்பு

சாயப்பட்டறைகளுக்குஅதிகாரிகள் சீல் வைப்பு

மதுரை: மதுரை அருகே விராதனூரில் அனுமதியின்றி செயல்பட்ட பிரபு, ஆறுமுகம் சாயப்பட்டறைகளுக்கு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர். மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.இவை அப்பகுதியில் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்கும் வகையில் செயல்பட்டதாக தகவல் வந்தது. மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட பொறியாளர் கிருஷ்ணாராம், உதவி பொறியாளர் பாண்டியராஜன், வி.ஏ.ஓ., இந்திரா நேற்று அங்கு சோதனை நடத்தினர். திருப்பூரைச் சேர்ந்த பிரபுவின் பெயரில் செயல்பட்ட சாயப்பட்டறை, ஆறுமுகம் பெயரில் புதிதாக கட்டப்படும் மற்றொரு பட்டறை ஆகியவற்றுக்கு சீல் வைத்தனர்.திருமங்கலம்: திருமங்கலம் அருகே எஸ்.புதூரில் அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறைகளால் சுற்றுப்புறச்சூழல் மற்றும் கண்மாய்க்கு பாதிப்பு ஏற்பட்டது. மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் தாசில்தார் மோகன் சோதனை நடத்தி அவைகளுக்கு சீல் வைத்தனர். பட்டறை உரிமையாளர், நில உரிமையாளர் மீது வி.ஏ.ஓ., முருகேசன் டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேணுகோபால் விசாரித்து அங்கிருந்த திருப்பூர் பாண்டியராஜன் (28), ஞானசேகரன் (47), ஏழுமலையை (28) கைது செய்தார். சாயப்பட்டறை உரிமையாளர் ஜவஹர், நில உரிமையாளர் மாயாண்டியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை