உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மதுரை வீரர் சாம்பியன்

 மதுரை வீரர் சாம்பியன்

மதுரை: மதுரை மாவட்ட க்யூ விளையாட்டு சங்கம், தமிழ்நாடு மாநில ரேங்கிங் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் போட்டி மதுரையில் நடந்தது.மாநில அளவில் சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் உள்ளிட்ட 12 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. ஆண்களுக்கான பிரிவில் மதுரையைச் சேர்ந்த வருண்குமார் சாம்பியன் பட்டத்தை வென்றார். மதுரையில் முதன்முறையாக நடந்த மாநில ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் போட்டியில் உலக ஸ்னுாக்கர் சாம்பியன் அனுபமா ராமச்சந்திரன், உலக மகளிர் பில்லியர்ட்ஸ் சாம்பியன் ஸ்ருதி, 27 முறை மாநில சாம்பியன் பெற்ற பிரேம் பிரகாஷ், தேசிய மாஸ்டர்ஸ் சாம்பியன் விஜய் நிச்சானி, மாநில சீனியர் ஸ்னுாக்கர் சாம்பியன் பார்த்திபா ராஜேந்திரன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்