துபாய்க்கு வேலைக்கு அனுப்பி மோசடி: ஒருவர் கைது
மதுரை : மதுரை ஆத்திகுளம் கனகவேல் நகர் எலக்ட்ரீசியன் பாண்டியராஜன் 32. இவர் துபாய்க்கு வேலைக்கு ஆட்களை அனுப்புவதாக கூறியதை நம்பி மதுரை சிம்மக்கல் பகுதி உணவு மாஸ்டர் மரியதாஸ் ரூ.50 ஆயிரம் கொடுத்தார். இவரை துபாய்க்கு பாண்டியராஜன் அனுப்பி வைத்தார். 2 மாதங்கள் வேலை செய்த நிலையில், அவரது விசா 60 நாட்கள் சுற்றுலாவிற்குரியது என தெரியவந்தது. அவருக்கு 2 மாத சம்பளத்தை வழங்காமல் பாண்டியராஜனுக்கு ஓட்டல் நிர்வாகம் அனுப்பியது.இதையடுத்து குடும்பத்தினர் அனுப்பிய பணத்தைக் கொண்டு இந்திய துாதரக உதவியுடன் மரியதாஸ் சொந்த ஊர் திரும்பினார். போலீஸ் கமிஷனர் லோகநாதனிடம் புகார் அளித்தார். மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் வினோதினி, இன்ஸ்பெக்டர் கதிர்வேல் விசாரித்தனர். மரியதாசின் சம்பளம் ரூ. 3.5 லட்சத்தை பெற்று மோசடி செய்ததாக பாண்டியராஜனை போலீசார் கைது செய்தனர்.