உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கண்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து பலி

 கண்டெய்னர் லாரியில் மின்சாரம் பாய்ந்து பலி

மதுரை: மதுரை கட்றாப்பாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 70. டெம்போ டிராவல்ஸ் டிரைவரான இவர், நேற்று காலை மேலஆவணி மூலவீதியில் சென்றபோது கண்டெய்னர் லாரியின் கதவு திறந்திருந்தது. அது நடந்து செல்வதற்கு இடையூறாக இருந்ததால் அதை அடைக்க கதவில் கை வைத்தபோது மின்சாரம் தாக்கி இறந்தார். விசாரணையில் கதவின் மேல்பகுதி மின்ஒயரில் பட்டிருந்தது தெரிந்தது. திலகர்திடல் போலீசார் விசாரிக்கின்றனர். ஹிந்து ஆலய பாதுகாப்பு மாநில நிர்வாகி ஆதிசேஷன்: ''முதியவர் 'ஷாக்' அடித்து விழுந்த நிலையில் அவருக்கு முதலுதவி அளிக்க ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனாலேயே அவர் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். தற்போது சபரிமலை சீசன், பள்ளி விடுமுறையால் மதுரைக்கு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் அதிகம் வருகின்றனர். மீனாட்சி கோயில் 'பார்க்கிங்' பகுதியில் தற்காலிகமாக ஆம்புலன்ஸ், மருத்துவக்குழு தயாராக இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை