உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணிக்கவாசகர் மதுரை புறப்பாடு

மாணிக்கவாசகர் மதுரை புறப்பாடு

மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழா நடந்து வருகிறது. இதில் பங்கேற்க திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் இருந்து மாணிக்கவாசகர் இன்று (செப்.1) காலை புறப்படுகிறார். மாலையில் மீனாட்சி அம்மன் கோயிலை சென்றடைகிறார். நாளை (செப். 2) ஆடி வீதியில் உள்ள பதினாறு கால் மண்டபத்தில் நரியை பரியாக்கிய திருவிளையாடல், செப். 3 ல் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா, செப். 4 முதல் செப். 10 வரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி, மீனாட்சி அம்மன் - சுந்தரேஸ்வரருடன் பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலிப்பார். செப். 11 ல் அவர்திருவாதவூர் கோயிலுக்கு திரும்புகிறார். ஏற்பாடுகளை இணை, உதவி ஆணையர்கள் கிருஷ்ணன், லோகநாதன், பேஷ்கார் பாலமுருகன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !