மாநகராட்சியில் மருத்துவ முகாம்
மதுரை: மதுரை மாநகராட்சி அலுவலர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமை மேயர் இந்திராணி, கமிஷனர் சித்ரா துவக்கி வைத்தனர்.மாநகராட்சி சுகாதாரத் துறை, நியூ லைப், மேக்ஸி விஷன் கண் மருத்துவமனைகள் சார்பில் மாநகராட்சி மைய, 5 மண்டல அலுவலகங்களில் என ஒரே நேரத்தில் நடந்தது. பொது, பெண்கள் சிறப்பு மருத்துவம், நுரையீரல், கண் மருத்துவம், இ.சி.ஜி., உட்பட 20க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேல் சிகிச்சை தேவைப்படுவோருக்கு அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 285 பேர் பங்கேற்றனர்.உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு மைய அலுவலகத்தில் மரக்கன்றுகளை மேயர், கமிஷனர் நட்டனர். துணை கமிஷனர் ஜெய்னுலாபுதீன், நகர்நல அலுவலர் இந்திரா, உதவி அலுவலர் அபிேஷக், முதன்மை மருத்துவ அலுவலர் கோதை, உதவி பொறியாளர் அமர்தீப், மண்டல தலைவர் பாண்டிசெல்வி, சுகாதாரகுழு தலைவர் ஜெயராஜ் பங்கேற்றனர்.