உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  நண்பர்கள் பேசாததால் மருத்துவ மாணவர் தற்கொலை வீடியோ கால் பேசியவர் பரிதாபம்

 நண்பர்கள் பேசாததால் மருத்துவ மாணவர் தற்கொலை வீடியோ கால் பேசியவர் பரிதாபம்

மதுரை: நண்பர்கள் தன்னுடன் பேசவில்லை என்பதற்காக வீடியோ காலில் பேசிவிட்டு மதுரை மருத்துவக்கல்லுாரி மாணவர் பவன்குமார் 23, தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அகூர்மோகன். இவரது மகன் பவன்குமார். மதுரை அரசு மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., 4ம் ஆண்டு படித்தார். தல்லாகுளம் பகுதியில் வீடு எடுத்து தங்கி படித்தவர் நவ.,13ல் தற்கொலை செய்துகொண்டார். தல்லாகுளம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் கூறியதாவது: பவன்குமார் முதலில் விடுதியில் தங்கியிருந்தார். சாப்பாடு பிடிக்காததால் தல்லாகுளம் பகுதியில் வாடகை வீட்டிற்கு மாறினார். அவருக்கு உதவியாக பாட்டி ரங்கம்மாள் இருந்தார். பவன்குமாருக்கு முன்கோபம் அதிகம். கோபம் வந்தால்கையை அறுத்து தன்னைத்தானே கஷ்டப்படுத்திக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்தநிலையில் பவன்குமாரின் பாட்டி சென்னையில் உள்ள அவரது பேத்தி வீட்டிற்கு சென்றுள்ளார். பவன்குமார் ஓட்டலில் சாப்பிட்டு வந்துள்ளார். அவருடன் படிக்கும் நண்பர்கள் சிலர் அவரிடம் சரிவர பேசாமல் இருந்ததாக தெரிகிறது. இதனால் பவன்குமார் மனவருத்தத்தில் இருந்துள்ளார். இதனால் நவ.,13 இரவில் அவருடைய நண்பர்களுக்கு வீடியோ காலில் 'ஏன் யாரும் என்னுடன் பேசுவதில்லை. இதனால் நான் சாகப்போகிறேன்' என பேசிவிட்டு அலைபேசியை துண்டித்தார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தபோது பவன்குமார் துாக்கிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், என போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்