உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டிச.23ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பரம்

டிச.23ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பரம்

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி சப்பரம் சுவாமி புறப்பாடு டிச.23ல் நடக்கிறது. அன்று அம்மனும், சுவாமியும் அதிகாலை 5:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பாடாகி யானைக்கல், வடக்கு வெளிவீதி, கீழவெளிவீதி, தெற்குவெளிவீதி, திருப்பரங்குன்றம் ரோடு வழியாக மேலவெளிவீதி, குட்ெஷட் தெரு, நாயக்கர் புதுத்தெரு, வக்கீல் புதுத்தெரு, கீழமாரட் வீதி, காமராஜர் ரோடு, விளக்குத்துாண், கீழமாசி வீதி வழியாக கோயிலை சென்றடைவர்.

அஷ்டமி சப்பரம் ஏன்

ஒருமுறை சிவபெருமான் அனைத்து உயிர்களுக்கும் உணவு அளித்துக்கொண்டிருந்தார். எல்லா உயிர்களுக்கும் உணவு போய் சேர்ந்ததா என பார்வதி பரிசோதிக்க நினைத்தார். எறும்பு ஒன்றை காலி குவளையில் அடைத்து வைத்தார். பின்பு திறந்து பார்த்தபோது அந்த எறும்பு ஒரு அரிசியை தின்றுக்கொண்டிருந்தது. இதை கண்டு வியந்த பார்வதி, சிவபெருமானிடம் மன்னிப்பு கேட்ட நாளே மார்கழி மாதத்தில் வரும் அஷ்டமி திதியான அஷ்டமி பிரதட்சணமாகும். டிச.23ல் உயிர்களுக்கு படியளக்கும் விதமாக அம்மனும், சுவாமியும் வீதி உலா வருவர். மீனாட்சி அம்மன் சப்பரத்தை பெண்களே வடம் பிடித்து இழுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை