நினைவுதின தமிழ்க்கூடல்
மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் திருமங்கலம் அரசு கல்லுாரி சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவுதினத்தை முன்னிட்டு தமிழ்க்கூடல் நிகழ்வு நடந்தது. ஆய்வு வளமையர் ஜான்சிராணி வரவேற்றார். சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். தமிழ்த்துறைத் தலைவர் வளர்மதி முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத்தலைவர் முத்துநிலவன் பேசினார். ஆய்வறிஞர் சோமசுந்தரி நன்றி கூறினார்.