மாநகராட்சி பள்ளிகளில் மனநல ஆலோசனை
மதுரை: மதுரை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் மனநலத்தை மேம்படுத்தும் வகையில் மனநல ஆலோசனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கமிஷனர் சித்ரா முயற்சியில் மனநல ஆலோசகர்கள் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மையங்களில், மாணவர்களுக்கான பிரச்னை, தற்கொலை எண்ணம் தடுப்பு, தவறான பழக்க வழக்கங்களை தடுத்தல், குறைந்த மதிப்பெண்களால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவது உள்ளிட்ட பல்வேறு மாணவர்களுக்கான பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்கப்படும். இதற்காக வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2:00 மணி முதல் 4:00 மணி வரை மாநகராட்சி பள்ளிகளில் மனநல நிபுணர்களை மாணவர்கள் நேரடியாக சந்தித்து ஆலோசனை பெற ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. திங்கள் - மாநகராட்சி ஈ.வெ.ரா. பெண்கள், செவ்வாய் - மணிமேகலை பெண்கள், புதன்- மறைமலை அடிகளார் ஆண்கள், வியாழன் - திரு.வி.க., வெள்ளி - இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நடக்கின்றன. ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள், பெற்றோர் அனுமதியுடன் இந்த சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம்.