மேலும் செய்திகள்
எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
25-Dec-2024
மதுரை, : மதுரையில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. கே.கே.நகரில் உள்ள சிலைக்கு அ.தி.மு.க., நகர் செயலாளர் செல்லுார் ராஜூ தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாநில மருத்துவரணி இணைச்செயலாளர் டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருப்பரங்குன்றம்
மதுரை கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் திருப்பரங்குன்றத்தில் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இளைஞரணி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வாடிப்பட்டி
பரவை நகர் அ.தி.மு.க., சார்பில் நடந்த விழாவிற்கு செயலாளர் ராஜா தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் ஆதவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர்மெச்சிகுளம், சத்தியமூர்த்தி நகர் வார்டுகளில் அ.தி.மு.க.,வினர் எம்.ஜி.ஆர்., உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். உசிலம்பட்டி
நகர் செயலாளர் பூமாராஜா, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மகேந்திரன், ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஓ.பி.எஸ்., அணி சார்பில் எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்றனர். அ.ம.மு.க., சார்பில் நகர் செயலாளர் மார்க்கெட் பிச்சை தலைமையில் நகர், ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலுார்
அ.வலையபட்டி, மேலூர், கொட்டாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கொண்டாடப்பட்டது. எம்.எல்.ஏ., பெரியபுள்ளான், நகர் செயலாளர் சரவணகுமார், தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிச்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
25-Dec-2024