உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 2000க்கும் மேற்பட்டோர் ராஜினாமா

செங்கோட்டையன் ஆதரவாளர்கள் 2000க்கும் மேற்பட்டோர் ராஜினாமா

ஈரோடு: செங்கோட்டையன் ஆதரவாளர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.,வில் இருந்து விலகினர். அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அமைப்பு செயலர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச்செயலர் பதவிகளை பறித்து, கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி, நேற்று அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து, கோபியில் உள்ள செங்கோட்டையனின் பண்ணை வீடு முன்பாக, அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்படியெல்லாம் செய்யக் கூடாது என, செங்கோட்டையன் சமாதானப்படுத்தியும் ஆதரவாளர்கள் கோஷத்தை குறைக்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலை, செங்கோட்டையனை சந்தித்த அவருடைய ஆதரவாளர்கள் பலரும், தங்களது கட்சி உறுப்பினர் அடையாள அட்டையை அவரிடம் வழங்கினர். கூடவே, தங்களுடைய உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் எழுதி, அதை செங்கோட்டையனிடமே வழங்கினர். அதே போல, செங்கோட்டையன் ஆதரவாளர்களாக இருக்கும், ஈரோடு மாவட்ட ஒன்றிய, நகர, இணை அணி நிர்வாகிகளும் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை செங்கோட்டையனிடம் அளித்துள்ளனர். இப்படி நேற்று மட்டும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் அக்கட்சியில் இருந்து விலகி, அதற்கான கடிதங்களை செங்கோட்டையனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி