உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எம்.சாண்ட் யூனிட்டுக்கு ரூ. 1000 உயர்வுக்கு பொறியாளர்கள் எதிர்ப்பு

எம்.சாண்ட் யூனிட்டுக்கு ரூ. 1000 உயர்வுக்கு பொறியாளர்கள் எதிர்ப்பு

உசிலம்பட்டி: ''கட்டுமானப் பணிக்கு மணலுக்கு பதிலாக உபயோகிக்கும் எம்.சாண்ட், பி.சாண்ட் விலையை குவாரி உரிமையாளர்கள் திடீரென உயர்த்தியதால், கட்டுமான பணிகள் பாதிக்கின்றன'' என பொறியாளர்கள், லாரி உரிமையாளர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.உசிலம்பட்டி பகுதியில் கட்டுமான பணிக்கு பெரும்பாலும் தேனி, திண்டுக்கல் பகுதி குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லிக்கற்கள் கொள்முதல் செய்கின்றனர். சில நாட்களாக எம்.சாண்ட் ஒரு யூனிட் விலை ரூ.3 ஆயிரம் என இருந்ததை ரூ.4 ஆயிரமாக நிர்ணயம் செய்துள்ளனர்.இதே போல் பி சாண்ட் விலையை ரூ. 4 ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாகவும், முக்கால் இஞ்ச் ஜல்லிகற்கள் ரூ.2 ஆயிரத்து 600 ல் இருந்து ரூ 3 ஆயிரமாகவும், ஒன்றரை இஞ்ச் ஜல்லிக்கற்கள் ரூ. 2 ஆயிரத்து 500ல் இருந்து ரூ. 3 ஆயிரமாகவும் விலை உயர்ந்துள்ளது.எப்போதும் யூனிட் ஒன்றுக்கு ரூ.200 ல் இருந்து ரூ.300 வரையே உயர்த்தப்படும் நிலையில் தற்போது ரூ.1000 வரை ஒரே நேரத்தில் அதிகரித்துள்ளனர். இதனால் சிறிய அளவில் வீடு, கடை போன்ற கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளோர் மிகவும் பாதிப்படைந்துள்ளனர்.எந்தவித முன்அறிவிப்பும் இன்றி திடீரென விலையை உயர்த்தியுள்ளதைக் கண்டித்து கட்டடப் பொறியாளர்கள் உசிலம்பட்டி பகுதியில் கண்டன போஸ்டர்கள் ஒட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இதே போல உசிலம்பட்டி அனைத்து லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், 'திடீர் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும்' என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை