உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / முல்லைநகர் மக்கள் போராட்டம்: மாநகராட்சி கூட்டத்தில் ஆதரவு தி.மு.க., குழு தலைவர் பேச்சால் அதிர்ச்சி

முல்லைநகர் மக்கள் போராட்டம்: மாநகராட்சி கூட்டத்தில் ஆதரவு தி.மு.க., குழு தலைவர் பேச்சால் அதிர்ச்சி

மதுரை; 'மதுரை முல்லைநகர் மக்கள் போராட்டத்திற்கு மனிதாபிமான நடவடிக்கை தேவை' என மாநகராட்சி கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் வலியுறுத்தினர்.கூட்டத்தில் தி.மு.க., சுகாதாரக் குழு தலைவர் ஜெயராஜ் பேசியது வருமாறு: முல்லைநகர் மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு குடியிருக்கின்றனர். இது என் வார்டுக்கு உட்பட்ட பகுதி. மாநகராட்சிக்கு அனைத்து வரிகளையும் இம்மக்கள் தொடர்ந்து செலுத்தியுள்ளனர். அவர்களை இரக்க குணத்துடன் பார்க்க வேண்டும். நீதிமன்றம் உட்பட எல்லோரும் கைவிட்டால் அவர்களை காப்பாற்றுவது யார். மதுரையில் தல்லாகுளம் ஒருகாலத்தில் கண்காய்க்குள் இருந்தது. அப்போதும் வழக்கு நடந்தது. அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்தது.மாட்டுத்தாவணியில் உயர்நீதிமன்ற அலுவலர்களுக்கான குடியிருப்பும் கண்மாய்க்குள் தான் இருந்தது. அங்கும் சுமூகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அங்கு ஒரு நீதி, முல்லை நகர் மக்களுக்கு ஒரு நீதியா. மக்களை காப்பதுதான் அரசு. ஆனால் நீதிமன்றம் எனக் கூறி மக்களை கைவிடலாமா என்றார்.இதனால் அதிர்ச்சியடைந்த மேயர் இந்திராணி பொன்வசந்த், ''இது நீதிமன்றம் உத்தரவு, வழக்கு நடக்கிறது'' என்றார். அப்போது நாளைக்கு நாங்களும், நீங்களும்தான் அவர்களிடம் ஓட்டுக்கேட்டு செல்ல வேண்டும். முல்லைநகர் மக்களை 'நீதிமன்ற வழக்கு' எனக் காரணம் கூறாமல் ஏதாவது செய்து அவர்களை காப்பாற்ற வேண்டும்'' என கவுன்சிலர் தெரிவித்தார். அ.தி.மு.க., காங்., மார்க்சிஸ்ட் கம்யூ., ம.தி.மு.க., கவுன்சிலர்களும் இதே கருத்தை பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை