உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பழிக்குப் பழியாக கொத்தனார் கொலை

பழிக்குப் பழியாக கொத்தனார் கொலை

வாடிப்பட்டி: மதுரை கோவில்பாப்பாகுடி வினோத்குமார் 29. கொத்தனாரான இவர் 2 ஆண்டுகளாக சமயநல்லுார் வைகை நகர் பகுதி வாடகை வீட்டில் மனைவி அமுதா 23, மூன்று வயது மகளுடன் வசித்தார். நேற்று மாலை அப்பகுதி பழைய சினிமா தியேட்டர் அருகே மது அருந்தியுள்ளார். காரில் வந்த கும்பல் வினோத்குமார் தலையில் ஆயுதங்களால் வெட்டி கொலை செய்து தப்பியது.சிக்கந்தர் சாவடியில் 2022ல் பெத்தானியாபுரம் ஆட்டோ டிரைவர் ரவி கொலை வழக்கு வினோத்குமார் மீது உள்ளதால் பழிக்குப்பழியாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரிக்கின்றனர்.இதே வழக்கில் கடந்த ஆண்டு ஜாமினில் வந்த வினோத்குமாரின் நண்பர் சூர்யா கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ