உறுதிமொழி ஏற்க அறிவிப்பு
மதுரை: தமிழகத்தில் மாநில அளவில் போதைப் பொருள் இல்லாத தமிழகம் உருவாக, போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுப்பதற்காக பெருந்திரளாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நந்தனம் அரசு கல்லுாரியில் இன்று (ஆக.11) நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக அனைத்து தொழிற்சாலைகள், கட்டுமான நிறுவனங்களும் தங்கள் தொழிலாளர்களை திரளாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்க செய்து போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை எடுத்து அதன் விவரத்தை தெரிவிக்க வேண்டும் என, தொழிலக பாதுகாப்பு கூடுதல் இயக்குனர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.