உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஒரு போன் போதுமே...மதுரை

ஒரு போன் போதுமே...மதுரை

கொசுத்தொல்லை தாங்கலை மதுரை எல்லீஸ்நகர் சாலை முத்து நகர் பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. குடியிருப்போர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மாநகராட்சியும் கொசு மருந்து தெளிப்பதில்லை. அப்படி தெளித்தாலும் அதற்கு கொசுக்கள் மயங்குவதில்லை. - எஸ். சுபா, எல்லீஸ்நகர். சாக்கடை பிரச்னை மதுரை முத்துப்பட்டி யோக விநாயகர் நகரில் உள்ள அங்கன்வாடி மையம் அருகில் அடிக்கடி சாக்கடை நீர் வெளியேறுகிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிப்பதால், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - வீரராகவன், முத்துப்பட்டி குடிநீரில் கழிவு மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் நீலகண்டன் கோயில் தெருவில் குடிநீர் கழிவுநீர் கலந்து வருகிறது. பலமுறை புகாரளித்தும் பயனில்லை. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். - சங்கரன், பசும்பொன் நகர். ஆக்கிரமிப்பு அட்டகாசம் நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில்குடி விலக்கு பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை பராமரிப்பின்றி உள்ளது. பயணிகளுக்கு தொந்தரவாக பிளக்ஸ் போர்டுகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கங்கா, கீழக்குயில்குடி. சுகாதாரக் கேடு மதுரை காமராஜர் ரோடு இங்கிலீஷ் கிளப் தெருவில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. மக்கள் சுகாதார கேட்டிற்கு ஆளாகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகசுப்பிரமணியன், காமராஜர் ரோடு. தேங்கும் நீர் மதுரை முடக்குசாலை காந்தி தெருவில் புதியதாக சிமென்ட் ரோடு அமைத்தாலும், மழை நீர் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களின் உடல்நலம் கேள்விக்குறியாகிறது. நோய் பரவுவதற்குள் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா. - பகவதி, முடக்குசாலை. தரப்படாத குடிநீர் இணைப்புகள் மதுரை பெத்தானியாபுரம் பவர்லைன் 2 வது குறுக்குத்தெருவில் முல்லைப்பெரியாறு கூட்டுக்குடிநீர் இணைப்புகள் இன்னும் தரப்படவில்லை. காலம்தாழ்த்தாமல் இணைப்பு கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். -பத்மா, பெத்தானியாபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ