| ADDED : ஜன 13, 2024 04:24 AM
புதுார: மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் இருந்து 13 முக்கிய சந்திப்புகளின் கண்காணிப்பு கேமராக்களை கண்காணிக்கும் நவீன கட்டுப்பாட்டு அறையை எஸ்.பி. சிவபிரசாத் திறந்து வைத்தார்.அவர் கூறியதாவது: 13 சந்திப்புகளில் சோலார் மூலம் இயங்கும் அவுட் போஸ்ட்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் கேமராக்கள் பொருத்தப்பட்டு விதிமீறல், விபத்து உள்ளிட்ட குற்றங்களை தடுக்கும் விதமாக கண்காணிக்கப்படும். முதல் கட்டமாக நாகமலைபுதுக்கோட்டை, திருமங்கலம் தீயணைப்பு நிலையம், விரகனுார் ரவுண்டானா, ஒத்தக்கடை, கூத்தியார்குண்டு கேமராக்களை கண்காணிக்கும் வசதி பொருத்தப்பட்டுள்ளது. மொத்த மதிப்பு ரூ.12 லட்சம். கப்பலுார், திருமங்கலம், நரசிங்கம், கடச்சனேந்தல் பகுதியில் இப்பணி முடிந்து விரைவில் கண்காணிக்கப்படும்.மேலுார், நத்தம் ரோட்டில் கடவூர், பாண்டியராஜபுரம் பகுதியிலும் விரைவில் ஏற்படுத்தப்படும். கடந்தாண்டு 94 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தோம். இந்தாண்டில் 24 பேரை கைது செய்துள்ளோம் என்றார்.