குன்றத்தில் தார்ச்சாலை திறப்பு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாய் கரையில் ரூ. 41.89 கோடியில் அமைக்கப்பட்ட புதிய தார்ச் சாலையை காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நெடுஞ்சாலை துறை திட்டங்கள் கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்ட பொறியாளர்கள் சுரேஷ்பாபு, சந்திரசேகர், உதவி கோட்ட பொறி யாளர் சீனிவாசன், உதவி பொறியாளர்கள் கணேஷ்குமார், லோக கணேஷ், ஆர்.டி.ஓ. சிவஜோதி, திருப்பரங்குன்றம் இன்ஸ்பெக்டர் மதுரைவீரன், எஸ்.ஐ., முருகானந்தம் கலந்து கொண்டனர்.