கழிவு நீரேற்று நிலையம் எதிரான வழக்கில் உத்தரவு
மதுரை: மதுரை உத்தங்குடி நவநீதன் உட்பட 4 பேர் உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:உத்தங்குடி பொன்மணி கார்டனில் பாதாளச்சாக்கடை அமைக்கும் பணி நடக்கிறது. பூங்காவிற்கு ஒதுக்கிய இடத்தில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க உள்ளனர். மாற்று இடத்தில் அமைக்கலாம். கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பினோம். பூங்காவிற்குரிய இடத்தில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்க தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு: இவ்விவகாரம் தற்போது எந்த நிலையில் உள்ளதோ அதே நிலை தொடர வேண்டும். கலெக்டர், கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை ஏப்.4 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.