உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேலமடை மேம்பாலத்தில் மேல்தள பணிகள் துவக்கம் விரைவில் போக்குவரத்து மாற்றம்

மேலமடை மேம்பாலத்தில் மேல்தள பணிகள் துவக்கம் விரைவில் போக்குவரத்து மாற்றம்

மதுரை : மதுரை மேலமடை சந்திப்பு மேம்பாலத்தில் மேல்தள பணிகள் துவங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக விரைவில் சிவகங்கை ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.மதுரை - சிவகங்கை ரோட்டில் மேலமடை சந்திப்பில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதையடுத்து, இதில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் துவங்கின. ரூ.153 கோடி செலவில், 28 துாண்களுடன் 1100 மீட்டருக்கு பாலம் அமைகிறது. இத்துாண்களுக்கு இடையிலும், தரையில் இருந்து பாலத்தை நோக்கியம் 'ஸ்பான்' எனும் 29 மேல்தளங்கள் அமைக்கப்பட்டு ரோடாக இணைந்து இருக்கும். இதில் முதல் மேல்தளம் அமைக்கும் பணி நேற்று துவங்கியது.இதற்கான கம்பி கட்டும் பணிகள் சில நாட்களாக நடந்தன. நேற்று கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்ட பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்ட பொறியாளர் ஆனந்த் பணிகளை துவக்கி வைத்தனர். இந்த மேல்தளம் 17.2 மீட்டர் அகலத்தில் அமையும். இதில் தலா 7.5 மீட்டர் அகலத்தில் ரோடும், நடுவில் 1.2 மீட்டர் அகலத்தில் சென்டர் மீடியனும், இருபக்க சுவர்களும் தலா 50 செ.மீ., அகலத்திலும் அமைய உள்ளது. இப்பாலம் கட்டும் பணிகள் வரும் 2025 ஆகஸ்டில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்நிலையில் இந்த மேல்தளப் பணிகள் உயரமான துாண்களுக்கு இடையே அமையும்போது, தரைத்தளத்தில் இருந்து கான்கிரீட் தளத்திற்கான முட்டுக் கொடுக்க வேண்டியது இருக்கும். அப்போது மேலமடை சந்திப்பில் இருந்து ரிங் ரோடு வரை 6 மாதங்களுக்காவது போக்குவரத்து மாற்றம் செய்ய வேண்டி இருக்கும். இதற்காக போலீசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. அடுத்த இருவாரங்களில் போக்குவரத்தை மாற்றி அமைக்க உள்ளனர். வாகனங்களை அண்ணாநகர், விரகனுார் வழியாகவும், மாட்டுத்தாவணி, பாண்டி கோயில் வழியாகவும் மாற்றி அமைக்க வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை