உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாப்பாபட்டிக்கு பல்லாங்குழி ரோடு

பாப்பாபட்டிக்கு பல்லாங்குழி ரோடு

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் இருந்து பாப்பாபட்டிக்கு 11 கி.மீ., துாரம் உள்ளது. உசிலம்பட்டி - வத்தலக்குண்டு ரோட்டில் இருந்து மேக்கிழார்பட்டி, கீரிபட்டி, திம்மநத்தம், இளந்தோப்பு வழியாக செல்லும் 9 கி.மீ., ரோடு அமைத்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. ஆங்காங்கே தார் ரோட்டில் பள்ளம் ஏற்பட்டு இருந்த நிலை மாறி தற்போது 9 கி.மீ., ரோட்டிலும் தொடர்ந்து பல்லாங்குழி போல் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில், பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் பயன்படுத்தும் இந்தப்பகுதி மக்கள் ரோட்டை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தும் சீரமைப்பு பணிகள் நடக்காமல் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை