உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓராண்டாக திறக்காத ஊராட்சி அலுவலகம்

ஓராண்டாக திறக்காத ஊராட்சி அலுவலகம்

சோழவந்தான் சோழவந்தான் அருகே காடுபட்டியில் 'கிராமச் செயலகம்' (ஊராட்சி அலுவலகம்) கட்டி ஓராண்டுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் 2022 -- 23 திட்டத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பில் புதிய ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டது. பணிகள் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ளது. இதனால் கட்டடம் பராமரிப்பின்றி சுற்றிலும் செடிகள் முளைத்து புதராக மாறி வருகிறது. தெரு நாய்கள், விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாக மாறி வருகிறது. அவ்வழியாக செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். தற்போது கட்டியுள்ள ஊராட்சி அலுவலகத்தைச் சுற்றிலும் ஏராளமான அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. ஆக்கிரமிப்புகள் முழுவதையும் அகற்றி பாதை அமைத்து விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை