நிழற்குடையின்றி பயணிகள்
பேரையூர்: டி.கல்லுப்பட்டியை அடுத்த எம். சுப்புலாபுரத்தில் நிழற்குடையின்றி பயணிகள் தவிக்கின்றனர்.திருமங்கலம் -- ராஜபாளையம் நான்கு வழிச்சாலை பணி 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. சாலை அகலப்படுத்தும் பணியின் போது இங்கிருந்து பயணிகள் நிழற்குடை அகற்றப்பட்டது. நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயில், மழையில் காத்திருக்கும் அவலம் நிலவுகிறது. நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.