உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / திருப்பரங்குன்றம் பஸ் நிறுத்தத்தில் வாகன நெரிசலால் மக்கள் அவதி

திருப்பரங்குன்றம் பஸ் நிறுத்தத்தில் வாகன நெரிசலால் மக்கள் அவதி

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயில் பஸ் ஸ்டாப்பில் நின்று செல்லும் டவுன் பஸ்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்த பஸ்ஸ்டாப்பில் மதுரை, திருமங்கலம் செல்லும் டவுன் பஸ்கள் எதிரெதிரே நிறுத்தப்படுகின்றன. இந்த இடத்தில் மேலரத வீதியில் இருந்து வரும் ரோடு சந்திக்கிறது. பெரிய ரத வீதியில் இருந்து வாகனங்கள் திருநகருக்கு செல்ல பஸ்ஸ்டாப் பகுதியில் இடது புறமாக திரும்புகின்றன. அதேஇடத்தில் திருநகரில் இருந்து வரும் வாகனங்கள் திருப்பரங்குன்றம் ஊருக்குள் செல்ல இந்த புளியமரம் பஸ் ஸ்டாப்பில் வலதுபுறம் திரும்புகின்றன.அதே பகுதியில் ஷேர் ஆட்டோக்களும் நிறுத்தப்படுவதால் கடும் நெரிசல் ஏற்படுகிறது. திருவிழா, முகூர்த்த நாட்கள், பவுர்ணமி நாட்களில் கேட்கவே வேண்டாம். எந்நேரமும் இந்த நெரிசல் இருக்கும். அந்த இடத்தை கடக்க குறைந்தது 20 நிமிடங்களாவது ஆகிவிடும்.இந்த நெரிசலை தவிர்க்க ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதிமூலம் மதுரை செல்லும் வாகனங்களுக்காக சற்று தள்ளி புதிய பஸ் ஸ்டாப் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால் அரசு டவுன் பஸ்கள் புதிய பஸ் ஸ்டாப் கட்டடத்தில் பஸ்கள் நிறுத்துவதை தவிர்த்து முன்பு போல் பழைய பஸ் ஸ்டாப்பிலேயே நின்று செல்கின்றன.நெரிசலால் பொதுமக்களும், வாகனம் ஓட்டுவோரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். மதுரை செல்லும் டவுன் பஸ்கள், ஷேர் ஆட்டோக்களை புதிய நிழற்கூரை அருகே நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை