உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை - நாகமலைபுதுக்கோட்டை புறவழிச்சாலைக்கு பிரதமர் அடிக்கல் மார்ச் 2026க்குள் முடிக்க திட்டம்

மதுரை - நாகமலைபுதுக்கோட்டை புறவழிச்சாலைக்கு பிரதமர் அடிக்கல் மார்ச் 2026க்குள் முடிக்க திட்டம்

மதுரை : மதுரையில் விராட்டிப்பத்து - நாகமலைபுதுக்கோட்டை இடையேயான ரூ.260 கோடியிலான புறவழிச்சாலைக்கு பிரதமர் மோடி நேற்று அடிக்கல் நாட்டினார்.மதுரையில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. நகரின் மேற்கு பகுதியில் தேனி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளது. இதனை தவிர்க்க புறவழிச்சாலை அவசியம் என தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்து ஆய்வு நடத்தினர். இதையடுத்து விராட்டிப்பத்து கிருதுமால் நதிக்கும் முன்பு கொக்குளப்பி கிராமம் அருகே டி.பி.எம்., நகரில் துவங்கி நாகமலைபுதுக்கோட்டை கீழக்குயில்குடி பிரிவு வரைக்கும் 3.53 கி.மீ., தொலைவுக்கு புறவழிச்சாலை அமைக்க திட்டம் தயாரானது.இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் சில ஆண்டுகளாக நடந்தது. இதில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவுக்கு வந்து பணிகள் துவங்க உள்ளன. இத்திட்டத்தின்படி ரூ.260 கோடி மதிப்பில் இந்தச்சாலை 24 மீட்டர் அகலத்திற்கு 4 வழிச்சாலையாக அமையும். ரோடுகள் தலா 10 மீட்டர் மற்றும் மீடியன் 4 மீட்டர் என அமையும் இந்த ரோட்டில் கப்பலுார் - சமயநல்லுார் - திண்டுக்கல் 4 வழிச்சாலையை கடப்பதற்கு ரூ.70 கோடியில் மேம்பாலம் அமைய உள்ளது. இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த மட்டும் ரூ.96 கோடி செலவிடப்படும்.பிரதமர் மோடி நேற்று தமிழகத்தில் 3 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 3 பணிகளை துவக்கியும் வைத்தார். அதில் அடிக்கல் நாட்டிய பணிகளில் இந்த மதுரை புறவழிச்சாலையும் ஒன்று. இத்திட்டம் மார்ச் 2026க்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி