பயத்தில் போலீசார்
சோழவந்தான்: சோழவந்தானில் போலீஸ் ஸ்டேஷனில் 20க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கூரை இடிந்து ஆபத்தான நிலையில் உள்ளது. விரிசல் வழியே மழைநீர் கசிந்து ஆவணங்கள் சேதமடைய வாய்ப்புள்ளது. கூரை எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற அச்சத்தில் போலீசார் பணிபுரிகின்றனர். அவர்களிடம் கேட்டபோது, 'புதிய கட்டடம் கேட்டு அதிகாரிகளுக்கு கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது' என்றனர்.