உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

ஓய்வு எஸ்.ஐ.,யிடம் திருடிய பெண் கைது

மதுரை: சூர்யா நகர் பழனிசாமி 74. ஓய்வுபெற்ற போலீஸ் எஸ்.ஐ., இவர் ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க வந்தபோது அவருக்கு உதவுவது போல் நடித்து தேனி ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரம் மணிமேகலை 25, வேறு ஏ.டி.எம்., கார்டை கொடுத்தார். பிறகு சிறுக சிறுக மொத்தம் ரூ.ஒரு லட்சம் பழனிசாமி வங்கிக்கணக்கில் இருந்து ஏ.டி.எம்., கார்டு மூலம் திருடியதாக கைது செய்யப்பட்டார். மணிமேகலை மீது ஏற்கனவே இதுபோன்ற வழக்குகள் மதுரை நகரில் உள்ளன.

ேஷர் மார்க்கெட்டில் நஷ்டம்: தற்கொலை

மதுரை: கம்பம் தவ்பீக் அகமது 32. ேஷர் மார்க்கெட்டில் முதலீடு செய்திருந்த நிலையில் நஷ்டம் காரணமாக கடன் பிரச்னைக்கு ஆளானார். மனஉளைச்சலில் வீட்டை விட்டு புறப்பட்டவர், ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு லாட்ஜில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கரிமேடு போலீசார் விசாரிக்கின்றனர். இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர்.

புகையிலை விற்றவர் கைது

பேரையூர்: தும்மநாயக்கன்பட்டி கருப்பசாமி 48. அதே ஊரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். ரோந்து சென்ற எஸ்.ஐ., ஜெயபாண்டியன் சோதனை செய்து 6 கிலோ 500 கிராம் புகையிலையை பறிமுதல் செய்து கைது செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி