உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போலீஸ் செய்திகள்...

போலீஸ் செய்திகள்...

புகையிலை விற்ற பெண் கைது மேலுார்: சொக்கம்பட்டி பகுதி யில் மதுவிலக்கு இன்ஸ் பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் ரோந்து சென்ற னர். அப்போது புகையிலை விற்ற சந்திராவை 74, கைது செய்து 30 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். வேனை மறித்து வழிப்பறி திருமங்கலம்: விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை டி.கரிசல்குளத்தை சேர்ந்த மதன்குமார் 23, சிவகாசி கல்லம்மநாயக்கன்பட்டியில் உள்ள சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய் கிறார். நேற்று முன்தினம் மதன்குமாரும், அதே ஊர் ராஜ்குமார் நிறுவன வாகனத்தில் சோப்புகளை விற்க திருமங்கலம் வந்தனர். மாலை 6:50 மணிக்கு திருமங்கலம் செக்கானுாரணி ரோட்டில் மேல உரப்பனுார் கண்மாய் அருகே வந்தபோது ஒரே டூவீலரில் வந்த மூன்று பேர், வேனை வழிமறித்து அதில் ஏறினர். மதன்குமார் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை பறித்து, அவரை வேனில் இருந்து தள்ளி விட்டு டூவீலரில் தப்பினர். வேனில் ராஜ்குமார் வேனில் விரட்டிச் சென்றும் பிடிக்க முடியவில்லை. திருமங்கலம் நகர் போலீசார் விசாரிக்கின்றனர். விபத்தில் ஒருவர் பலி கொட்டாம்பட்டி: புரண்டிபட்டியில் நேற்று முன்தினம் நடந்த வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபி ஷேகத்தில் அதே ஊரைச் சேர்ந்த முருகன் 50, வேலை பார்த்தார். இந்நிகழ்ச்சிக்கு சமையல் செய்த தும்பைப்பட்டியை சேர்ந்தவர்களுக்கு சம்பளம் கொடுக்க இரவு 10:00 மணிக்கு டூவீலரில் சென்றார். கோட்டைப்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்றபோது பின்னால் மதுரை நோக்கி சென்ற கார் மோதி முருகன் இறந்தார். கொட்டாம்பட்டி போலீஸ்காரர் தெய்வேந்திரன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி