உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சர்ச்சில் பொங்கல் விழா

சர்ச்சில் பொங்கல் விழா

வாடிப்பட்டி: வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை சர்ச்சில் பொங்கல் விழாவையொட்டி விளையாட்டு போட்டிகள் நடந்தன. சர்ச் பாதிரியார் வளன் தலைமை வகித்தார். பொங்கல் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் 7 அன்பியங்கள் குழுக்களாக பொங்கல் வைத்தனர். சிறுவர், சிறுமியர், இளைஞர்களுக்கு ஓட்டம், உரி அடித்தல், கயிறு இழுத்தல், கோலம், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. சார்லஸ் பள்ளி, புஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் ஜெரால்டு ஜேசுராஜ், ரோனிகா சந்திரா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். புஷ்பகம் பொறுப்பாளர் ஞானசிகாமணி போட்டிகளை ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை