| ADDED : ஜன 09, 2024 06:19 AM
மதுரை : தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மதுரை கோட்ட அதிகாரிகள் கரூர், கருப்பம்பாளையம், செட்டிபாளையம், குள்ளபட்டி, இசநத்தம்,என்.வெங்கடபுரம், கரூர், செம்மடி, மஞ்சநாயக்கன்பட்டி, பரசேரி, கோட்டாறு, தென்காசிபகுதிகளில் கூட்டு ஆய்வு மேற்கொண்டனர்.எட்டு மின்திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் ஈடுபட்ட நுகர்வோரிடம் ரூ.9 லட்சத்து 48 ஆயிரத்து 10 இழப்பீடு தொகையாக வசூலிக்கப்பட்டது. அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டு சமரச தொகையாக ரூ.81 ஆயிரம் செலுத்தியதால் அவர்கள் மீது புகார் பதிவு செய்யப்படவில்லை. மின்திருட்டு தொடர்பாக 94430 37508 எண்ணில் தெரிவிக்கலாம் என செயற்பொறியாளர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.