பஸ் கேட்டு மறியல்
திருமங்கலம்: திருமங்கலம் தாலுகா புங்கங்குளத்திற்கு 5 ஆண்டுகளுக்கு முன் அரசு பஸ் வந்த நிலையில் சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. மாணவர்கள், வேலைக்கு செல்வோர் சிரமப்பட்டனர். அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லாததால் நேற்று காலை திருமங்கலம் ரோட்டில் 50-க்கும் மேற்பட்டோர் ஒருமணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.போக்குவரத்து பாதித்தது. இன்ஸ்பெக்டர் சுப்பையா, போக்குவரத்து மேலாளர் முத்துமணி சமரசம் செய்தனர்.