உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குடிநீருக்காக மறியல்

குடிநீருக்காக மறியல்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் தென்பழஞ்சி கிராமத்தில் சில மாதங்களாகவே குடிநீர் பிரச்னை இருக்கிறது. ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயனில்லை எனக்கூறி பெண்கள் காலி குடங்களுடன் நேற்று திருப்பரங்குன்றம் – -நாகமலை புதுக்கோட்டை ரோட்டில் ஒருமணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதித்தது. ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் தர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். அதுவரை தற்காலிகமாக லாரிகள் மூலம் தினமும் குடிநீர் விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் சமரசம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்