உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காந்தி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் அஞ்சலி

காந்தி அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் அஞ்சலி

மதுரை: மகாத்மா காந்தியின் 76வது நினைவு நாளையொட்டி, மதுரையில் உள்ள காந்தி அருங்காட்சியகத்தில் அவரது திருவுருவ சிலை மற்றும் காந்தி அஸ்தி உள்ள இடத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அருங்காட்சியகம் பொருளாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் நந்தாராவ் முன்னிலை வகித்தார். நிகழ்வில் காந்தி அருங்காட்சியக கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் மற்றும் சபுரா பிவி ஆகியோர் பங்கேற்றனர் .பள்ளி மாணவ மாணவிகள் காந்தி அஸ்தி நினைவு இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் மற்றும் மதுரை ஜல்லிக்கட்டு ரோட்டரி சங்கம் சார்பில் நிறுவனத் தலைவர் நெல்லை பாலு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் கராத்தே கிராண்ட் மாஸ்டர் லண்டனைச் சேர்ந்த நாசிகா மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஜான் மற்றும் கோடுலா ஆகியோர் பங்கேற்றனர். அனைத்து அமைப்பைச் சார்ந்த மக்கள் காந்தி சிலைக்கும் காந்தி நினைவு அஸ்தி உள்ள இடத்திலும் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ