ராஜராஜ சோழன் சதய விழா
சோழவந்தான்: சோழவந்தான் அருகே கொடிமங்கலத்தில் கள்ளர் பண்பாட்டு மையம் சார்பில் மாமன்னர் ராஜராஜ சோழன் 1039 வது சதய விழா நடந்தது.தலைமை ஒருங்கிணைப்பாளர் கலைமணி தலைமை வகித்தார். நிர்வாகிகள் காளிதாசன், பாலமுருகன், பிரதீப், பெரியசாமி முன்னிலை வகித்தனர். பாண்டி வரவேற்றார். சோழ மன்னனின் உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செய்தனர். காஞ்சிவனம் சுவாமி உருவப்படத்தை திறந்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். திருவேடகத்திலும் உருவப்படத்தை திறந்து வைத்தனர். நிர்வாகிகள் இளஞ்செழியன், வீரபாண்டி, பாண்டியராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.