உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வைகை அணையில் நீர் திறப்பு குறைப்பு

வைகை அணையில் நீர் திறப்பு குறைப்பு

ஆண்டிபட்டி: மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களின் பெரியாறு பாசனப்பகுதி, திருமங்கலம் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்கள் மற்றும் பெரியாறு பிரதான கால்வாய் பாசனப்பகுதியின் கீழ் உள்ள இருபோக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கும் வைகை அணையில் இருந்து தண்ணீர் வழங்கப்படுகிறது. அணையிலிருந்து வினாடிக்கு 900 கன அடி வீதம் கால்வாய் வழியாக பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீர் நேற்று மாலை 4:00 மணிக்கு வினாடிக்கு 700 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. குடிநீருக்காக வழக்கம்போல் 69 கன அடி நீர் வெளியேறுகிறது. நேற்று அணை நீர்மட்டம் 59.12 அடி. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 2150 கன அடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி