மேலும் செய்திகள்
மீன்கரை ரோட்டில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்
26-Sep-2024
மதுரை, : பெரியாறு வைகை வடிநில உபகோட்டத்தில் ஆனையூர் கண்மாய், முடக்கத்தான் கண்மாய்கள் நீர்ப்பாசனத்திற்கு பயன்படுகின்றன.ஆனையூரில் இருந்து 1200 மீட்டர் நீள வாய்க்கால் வழியாக முடக்கத்தான் கண்மாய்க்கு நீர்செல்ல வேண்டும். பல ஆண்டுகளாக இந்த வாய்க்காலை ஆக்கிரமித்து பலர் வீடு கட்டியிருந்தனர். சில இடங்களில் வாய்க்காலை நிரந்தரமாக கட்டுமானத்தால் மூடியும், சில இடங்களில் தண்ணீர் செல்ல துாம்பு வைத்தும் ஆக்கிரமித்திருந்தனர்.கலெக்டர் சங்கீதா, கண்காணிப்பு அலுவலர் அருண் தம்புராஜ் அறிவுரைபடி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதாக உதவி செயற்பொறியாளர் சையது ஹபீப், உதவி பொறியாளர் பிரபாகரன் தெரிவித்தனர். அவர்கள் கூறுகையில், ''நீர்வரத்து வாய்க்காலின் மீது 60 சிறிய பாலங்களுடன் வீடுகள் கட்டப்பட்டிருந்தன. ஆனையூரில் இருந்து முடக்கத்தான் கண்மாய்க்கு தண்ணீர் செல்ல வழியின்றி மாற்றுப்பாதையில் சென்றது. இரு நாட்களாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் வாய்க்காலில் தடையின்றி தண்ணீர் செல்கிறது'' என்றனர்.
26-Sep-2024