உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நமக்கு நாமே என செயல்படும் குடியிருப்போர் சங்கத்தினர்

நமக்கு நாமே என செயல்படும் குடியிருப்போர் சங்கத்தினர்

அலங்காநல்லுார்: கோவில்பாப்பாக்குடி ஊராட்சி ஏ.ஆர்.சிட்டி விரிவாக்க பகுதியில் அரசை எதிர்பார்க்காமல் 'நமக்கு நாமே' என்று குடியிருப்போரே பாதாள சாக்கடை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மதுரை மேற்கு ஒன்றியம் கோவில்பாப்பாகுடி ஊராட்சி ஏ.ஆர்.,சிட்டி விரிவாக்க பகுதிகளில் குப்பை வாங்க துாய்மை பணியாளர்கள் வருவதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இந்நிலையில் இப்பகுதி குடியிருப்போர் அரசை எதிர்பார்க்காமல் குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை வசதியை ஏற்படுத்தி வருகின்றனர்.குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் கந்தன், துரைப்பாண்டியன், நாராயணமூர்த்தி, ஆனந்தன், ரவிக்குமார் கூறியதாவது: மதுரை நகரையொட்டி உள்ளதால் குடியிருப்புகள் தினமும் அதிகரித்து வருகின்றன. இந்த ஊராட்சியில் 4 ஆண்டுகளுக்கு முன்பு வரை 8 ஆயிரமாக இருந்த மக்கள்தொகை தற்போது 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஆனால் துாய்மை பணியாளர்கள் 14 பேர் தான் உள்ளனர்.இதனால் பல பகுதிகளில் குப்பை கழிவுகளை சேகரிக்க யாரும் வருவதில்லை. இதனால் சுகாதாரம் பாதிக்கிறது. இப்பகுதியில் குடிநீர், கழிவு நீர் வசதிகள் ஊராட்சி சார்பில் செய்து தர தாமதமானதால் நாங்களே அவ்வசதிகளை உருவாக்கிக் கொண்டோம். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது ஊராட்சி அனுமதியுடன் கழிவுநீர் வெளியேற்றும் வாய்க்கால் பணிகளை செய்து வருகிறோம். வீடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப டிரான்ஸ்பார்மர்கள் இல்லாததால் 'லோ வோல்டேஜ்' மற்றும் மின்தடை ஏற்படுகிறது. காலி வீட்டடி மனைகளில் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்குகிறது. அதிலிருந்து விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் வருகின்றன. தெரு நாய்கள் அதிகம் சுற்றித் திரிகின்றன. ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ