மேலும் செய்திகள்
வீடுகளை சூழ்ந்துள்ளது மழைநீர்: மக்கள் சிரமம்
10-Oct-2025
மேலுார்: மேலுார் நகராட்சி 25 வது வார்டு கருத்தபுளியம்பட்டி நேருஜி 2வது தெருவில் பேவர் பிளாக் ரோடு தாழ்வாகவும், புதிதாக அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய் உயரமாகவும் உள்ளது. கால்வாயினுள் மேடு பள்ளமாக உள்ளதால் கழிவுநீர் வெளியேறவில்லை. பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளின் முன் தேங்கிக் கிடக்கிறது. நகராட்சி பொறியாளர் முத்துக்குமார் கூறுகையில்,ரோட்டை உயர்த்துவதற்கான திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் ரோடு உயர்த்தப்படும். தேங்கிய கழிவு நீரை அகற்றி வருகிறோம் என்றார்.
10-Oct-2025