உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / என்கவுன்டர் செய்ய திட்டம் ரவுடி மனைவி கமிஷனில் மனு

என்கவுன்டர் செய்ய திட்டம் ரவுடி மனைவி கமிஷனில் மனு

மதுரை:மதுரையில் 22 ஆண்டுகளாக தொடரும் பழிக்குப்பழி கொலைகளில் தற்போது, 'மூளையாக' செயல்பட்டு வரும் பிரபல ரவுடி வெள்ளைக்காளியை போலீசார் 'என்கவுன்டர்' செய்ய இருப்பதாக கூறி, அவரது மனைவி திவ்யா, மாநில மனித உரிமை கமிஷனில் மனு அளித்துள்ளார்.மனுவில் கூறியிருப்பதாவது:நான்கு ஆண்டுகளாக தண்டனை கைதியாக, என் கணவர் புழல் சிறையில் உள்ளார். மார்ச் 22ல் மதுரையில், 'கிளாமர்' காளி கொலை செய்யப்பட்டார். இதற்கும், என் கணவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வழக்கில் என் கணவரை காவலுக்கு எடுத்து விசாரிக்க, அழைத்துச் செல்லும் பட்சத்தில், போலி என்கவுன்டர் அல்லது துப்பாக்கியால் சுட்டு நிரந்தர ஊனமாக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.மார்ச் 31ல் என் கணவரின் நண்பர் சுபாஷ் சந்திரபோஸ் போலீசாரால், என்கவுன்டர் செய்யப்பட்டார். எனவே, மனித உரிமை மீறல் நடக்காத வகையில் அவரது உயிரை காப்பாற்ற வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Mani . V
ஏப் 16, 2025 04:14

ஏம்மா, அவன் என்ன சுதந்திரப்போராட்ட தியாகியா? ரௌடிதானே? எத்தனை பேர் குடியை கருவறுத்தானோ? உன்னையும் சேர்த்து போடணும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை