உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ரூ.5 லட்சம் திருட்டு

 ரூ.5 லட்சம் திருட்டு

கொட்டாம்பட்டி: புதுக்கோட்டை மாவட்டம் உடையான்பட்டி ஹேமலதா 24. இவர் புது தாமரைபட்டியில் கணவருடன் வசிக்கிறார். ஒத்தக்கடையில் வசிக்கும் உறவினரின் சிகிச்சைக்கு உதவ, நகரப்பட்டி கனரா வங்கியில் நகையை அடகு வைத்து ரூ.8.20 லட்சம் பெற்றார். பின்பு ஒத்தக்கடைக்கு பஸ்சில் சென்றார். கூட்டம் அதிகமாக இருந்ததால், பணம் வைத்திருந்த பையை உட்கார்ந்து இருந்த பெண்களிடம் கொடுத்தார். ஒத்தக்கடையில் இறங்கியவர் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது பையில் இருந்த ரூ.5 லட்சம் திருடு போனது தெரிந்தது. இன்ஸ்பெக்டர் லோகநாதன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை