உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சந்தனக்கூடு திருவிழா

சந்தனக்கூடு திருவிழா

அலங்காநல்லுார், : அலங்காநல்லுார் அருகே அய்யூரில் அரபு மஸ்தான் சந்தனக்கூடு கொடிமர திருவிழா நடந்தது.தர்ஹாவிற்கு சொந்தமான சந்தனக்கூடு கொடிமரம் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துவோரின் கொடிமரங்கள் பள்ளிவாசலுக்கு வரவழைக்கப்பட்டன. சந்தனம், ஜவ்வாது, மல்லிகை மலர்களால் கொடிமரங்கள் அலங்கரிக்கப்பட்டன. சிறப்பு துவா நடந்தது. தொடர்ந்து மின் அலங்காரத்தில் மேளதாளம் முழங்க, வாண வேடிக்கைகளுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்று மீண்டும் பள்ளிவாசலை அடைந்தனர். அனைவருக்கும் சந்தனம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை அய்யூர் முஸ்லிம் ஜமாத்தார்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை