உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சவுராஷ்டிரா கல்லுாரி பட்டமளிப்பு விழா

சவுராஷ்டிரா கல்லுாரி பட்டமளிப்பு விழா

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி சுயநதிப் பிரிவு 26வது பட்டமளிப்பு விழா செயலாளர் குமரேஷ் தலைமையில் நடந்தது. மதுரை குவாலிட்டி நிட் வேர் நிறுவன மேலாண்மை இயக்குனர் குமரன் ஜகுவா பட்டங்கள் வழங்கி பேசுகையில், ''மாணவர்கள் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. மாறிவரும் தொழில் நுட்பங்களை முழுமையாக அறிய வேண்டும். திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிரச்னைகளுக்கு வெற்றிகரமான தீர்வு காண வேண்டும். தலைமை பண்புகளை வளர்த்துக் கொண்டால்தான் தொழிலில் வெற்றி பெற முடியும்'' என்றார். 244 மாணவர்கள் பட்டங்களும், 32 மாணவர்கள் விருதுகளும் பெற்றனர். முதல்வர் ஸ்ரீனிவாசன் உறுதிமொழி வாசிக்க மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். கல்லுாரி தலைவர் பன்சிதர், நிர்வாக குழு உறுப்பினர்கள் வெங்கடேஸ்வரன், சரவணன், ராமசுப்பிரமணியன், முரளிதாஸ், தேர்வு கட்டுப்பாட்டாளர் துரைசாமி பங்கேற்றனர். பொருளாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ