| ADDED : பிப் 01, 2024 04:59 AM
புதுார் : மதுரை மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எஸ்.பி. டோங்க்ரே பிரவீன் உமேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.மதுரை மாவட்டத்தில் காணமல் போன அலைபேசி குறித்து பதிவான புகார்களை இரு மாதங்களில் மாவட்ட சைபர் கிரைம் மூலம் ரூ. 17 லட்சத்து 97 ஆயிரத்து 200 மதிப்புள்ள 115 அலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு எஸ்.பி டோங்க்ரே பிரவீன் உமேஷ் நேற்று உரியவர்களிடம் ஒப்படைத்தார்.இது குறித்து அவர் கூறியதாவது: மதுரை மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன்கள் மார்ச் 2021 ஆண்டு முதல் துவங்கப்பட்டு ஏ.எஸ்.பி கருப்பையா மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது. இதுவரை ஒரு கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 800 மதிப்புள்ள 1322 அலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், வங்கியிலிருந்து பேசுவதாக கூறும் நபர்களிடம் வங்கி கணக்கு , ஏ.டி.எம். பற்றிய விபரங்கள், ரகசிய எண், ஒருமுறை கடவுச் சொல் என எதையும் தெரிவிக்க கூடாது. இழக்கப்பட்ட பணத்தில் இதுவரை ரூ. 67 லட்சத்து, 57 ஆயிரத்து 404 திரும்ப பெற்று தந்துள்ளோம். பணத்தை இழந்தவர்கள் உடனே போலீஸ் உதவி எண் 1930 தொடர்பு கொள்ளலாம், மேலும் https://www.cybercrime.gov.in என்ற இணையதள முகவரியில் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.